'பாஸ்போர்ட்டை முடக்கினால் இந்தியாவுக்கு எப்படி வர முடியும்?' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'பாஸ்போர்ட்டை முடக்கினால்
இந்தியாவுக்கு எப்படி வர முடியும்?'

புதுடில்லி :''என் பாஸ்போர்ட்டை முடக்கினால், இந்தியாவுக்கு எப்படி வர முடியும்?'' என, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சிக்கியுள்ள, மெஹுல் சோக்சி கேட்டுள்ளார்.

India,இந்தியா


மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, அவரது உறவினர், மெஹுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில், ௧௨ ஆயிரம்கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, மோசடி செய்துள்ளனர். இது பற்றி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, தனித்தனி வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கின்றன.

முறைகேடு வெளியாவதற்கு முன், இருவரும் வெளிநாடுக்கு தப்பிச் சென்று விட்டனர்.இதையடுத்து, அவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துகளை, அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இருவரது பாஸ்போர்ட்களும் முடக்கப்பட்டு உள்ளன.

மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி, இருவருக்கும்,சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பி உள்ளது.இந்நிலையில், சி.பி.ஐ.,க்கு, சோக்சி அனுப்பி உள்ள கடிதம்:என் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது; அப்படியிருக்கையில், என்னால், இந்தியாவுக்கு எப்படி திரும்பி வர முடியும்?

பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளதற்கு, மும்பையில் உள்ள, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், எந்த விளக்கமும் தரவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு, என்னால் என்ன ஆபத்து ஏற்படும்?

Advertisement

என் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன், வியாபார விஷயமாக, வெளிநாட்டுக்கு சென்று விட்டேன்.

அப்படியிருக்கையில், என் வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளை பறிமுதல் செய்து, என் தொழிலையே அமலாக்கத் துறை நசுக்கி விட்டது. என் மீது, திட்டமிட்டே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மார்-201802:33:25 IST Report Abuse

தமிழ்வேல் அதான் ரெண்டு மூணு பாஸ்போர்ட் இருக்காமே..

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மார்-201822:43:27 IST Report Abuse

Pugazh Vவெளிநாடு போக ஏற்பாடு பண்ணிக் கொடுத்து டிக்கெட் ரூம் எல்லாம் போட்டு குடுத்துட்டு, அப்புறமா பாஸ்போர்ட் டை முடக்கிட்டு..இதோ பார் மோசடியை கண்டு புடிச்சுட்டேன்னு ஸீன் காமிச்சுண்டு..அவர் தான் வரலை கேஸ் போட நாங்க ரெடின்னு வட சுடறாங்க பார்..அங்கே தான் பிஜேபி நிக்குது

Rate this:
yaaro - chennai,இந்தியா
09-மார்-201820:43:40 IST Report Abuse

yaaroChoksi can go to local Indian cuisine consulate and they can facilitate travel.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X