'பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பு'

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''தமிழகத்தில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், தமிழக சுகாதாரத்துறை சார்பில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 914 ஆக உள்ளது. தமிழகத்தில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 943 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை, கண்டிப்புடன் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மகளிருக்காக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும், தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும். கோடைகால தொற்று நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணிகள், தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201814:50:31 IST Report Abuse
Pasupathi Subbian இந்த ஆள் சொல்லுவதை என்னால் எதையுமே நம்பமுடியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X