மன சோர்வால் போலீஸ் விபரீதம் : நீதிபதி கிருபாகரன் வேதனை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மன சோர்வால் போலீஸ் விபரீதம் : நீதிபதி கிருபாகரன் வேதனை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: ''பணி அழுத்தம், மனச் சோர்வு காரணமாக, ராஜினாமா அல்லது தற்கொலை முடிவை, போலீசார் எடுக்கின்றனர்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.தமிழகத்தில், போலீசாரின் பணி நிலை குறித்து விசாரிக்கும்படி, வழக்கறிஞர் புருஷோத்தமன், மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது:சமாதி, நினைவிடங்கள், யாருமே இல்லாத பங்களாக்களில், தேவையின்றி போலீசார் நிறுத்தப்படுகின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள், கார்களில் செல்லும் போது, சாலைகளில் மணிக்கணக்கில் போலீசார் நிறுத்தப்படுகின்றனர். போலீஸ் துறையில், ௧௯ ஆயிரத்துக்கும் மேல் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வந்தது. இது, சரிதானா என்பதை, அரசு கூற வேண்டும்.குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகளில், குடும்பத்துடன் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பணி அழுத்தம் மற்றும் மனச் சோர்வு காரணமாக, ஒன்று, பணியை விட்டு செல்கின்றனர் அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். ௨௪ மணி நேரமும் தொடர்ந்து பணி செய்வதால், அவர்கள் சோர்வு அடைகின்றனர். அவர்களுக்கு, போதிய ஓய்வு அளிக்க வேண்டும்.போலீசார் அனைவரும் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டால், தமிழகத்தின் தலைவிதி என்ன ஆகும் தெரியுமா; நீதிமன்றம் உத்தரவிட்டு, ஆறு ஆண்டுகள் ஆகியும், போலீஸ் ஆணையம் அமைக்காதது ஏன்; வரும், ௧௯ம் தேதிக்குள், போலீஸ் ஆணையம் குறித்து, அரசு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.***

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201806:19:15 IST Report Abuse
Rajendra Bupathi போதும், போதும்?அடேங்கப்பா கண்டனமும், வேதனையும் தெரிவிச்சாலே போதுமே? இனிமே எல்லாம் சரியா ஆயிடும்?இனிமே யாரும் கவலை பட வேண்டாம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை