கோடை விடுமுறைக்காக பிரீமியம் பஸ்கள் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை விடுமுறைக்காக பிரீமியம் பஸ்கள் அதிகரிப்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும், தொலைதுார பஸ்களின் வசூலை அதிகரிக்கும் நோக்கில், கோடை காலத்தில், பிரீமியம் சேவைகள் அறிமுகமாகின்றன.இதுகுறித்து, ஓட்டுனர்கள் கூறியதாவது:தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், தொலைதுார பஸ்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட பின், வசூல் குறைந்துள்ளது. கோவில், குடும்ப விழாக்களுக்கு, குடும்பத்துடன் செல்வோர் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. பெரும்பாலான பஸ்கள், காலியாக செல்கின்றன. இதை மாற்றும் வகையில், ஒவ்வொரு பணிமனையிலும், குறைந்தது, 10 பஸ்களை, பிரீமியம் பஸ்களாக மாற்றி, கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில், 30க்கும் மேற்பட்ட பஸ்கள், மூன்று நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் வகையில், பிரீமியம் பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு செல்லும் பஸ், பெருங்களத்துார், மேல்மருவத்துார், திண்டிவனம் ஆகிய இடங்களில் மட்டுமே நின்று, மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடும்.ஆனால், சாதாரண பஸ்கள், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நின்று செல்வதால், விழுப்புரம் சென்றடைய, நான்கரை மணி நேரமாகும். பயணியர் வசதிக்காகவே, பிரீமியம் பஸ்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், சாதாரண பஸ்களை விட, 30 ரூபாய் மட்டுமே கட்டணம் அதிகம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை