போலி எண்ணெய் : ரூ.11.50 லட்சம் அபராதம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி எண்ணெய் : ரூ.11.50 லட்சம் அபராதம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: போலியாக, 16 பிராண்ட்களில் சமையல் எண்ணெய் தயாரித்த கும்பல் பிடிபட்டுள்ளது. அவர்களிடம், 11.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.தமிழக உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், அமுதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, சமையல் எண்ணெய்யில் கலப்படத்தை தடுக்க, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்காக, எண்ணெய் நிறுவனங்களுக்கு, முறையான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், இடையன்காட்டு வலசு பகுதியில் நடத்திய சோதனையில், ஒரு நிறுவனத்தில், 16 வகை பிராண்ட்களில், போலி சமையல் எண்ணெய் தயாரித்தது தெரியவந்தது.உடன், 16 ஆயிரத்து, 950 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு, 11.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும், உணவு கலப்படம் குறித்த புகார்களை, 94440 42322 என்ற எண்ணில், 'வாட்ஸ் ஆப்' செயலியில் பதிவிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை