புதிய நுகர்வோர் கோர்ட் 90 வழக்குகள் மாற்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதிய நுகர்வோர் கோர்ட் 90 வழக்குகள் மாற்றம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : திருப்பூரில், மார்ச் 12ல், புதிய நுகர்வோர் கோர்ட் திறப்பதை முன்னிட்டு, கோவையில் இருந்து, 90 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்ட வழக்குகளை விசாரிக்க, புதிய நுகர்வோர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. திருப்பூரில் இதன் திறப்பு விழா, 12ம் தேதி, காலை 9:30க்கு நடக்கிறது. இதையடுத்து, கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து, 90 வழக்குகள் பிரித்து எடுக்கப்பட்டு, திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளன. திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கோவை நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரனுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை