பாலியல் புகார் செய்ய குழு அமைக்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகார் செய்ய குழு அமைக்க உத்தரவு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ஆசிரியைகள் பாலியல் ரீதியான தொந்தரவால் பாதிக்கப்பட்டால், புகாருக்கு தீர்வு காண உள் விசாரணைக் குழுவை அமைக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஒரு பள்ளி ஆசிரியை, 'தலைமை ஆசிரியர் இரட்டை அர்த்த வசனம் பேசி தொந்தரவு செய்தார்' என போலீஸ், மாநில மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். கல்வித் துறை விசாரிக்க, மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.இதையடுத்து, ஆசிரியை, 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, புகார் குழு அமைத்து விசாரித்து, தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு:பணிபுரியும் பெண்களுக்கு எதிரான, பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கும் மற்றும் தீர்வு காணும் சட்டப்படி, உள் விசாரணை குழுவை அரசுஅமைக்க வேண்டும். மனுதாரரின் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும்.இதுகுறித்த சுற்றறிக்கையை, பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கீழ்நிலையில் உள்ள அலுவலர்களுக்கு, ஆறு வாரங்களில் அனுப்ப வேண்டும். மனுதாரர் மற்றும் தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X