துணை வேந்தர் யார்? : பல்கலையில் விவாதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணை வேந்தர் யார்? : பல்கலையில் விவாதம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அண்ணா பல்கலை புதிய துணை வேந்தர் யார் என்ற விவாதம், அப்பல்கலை வட்டாரத்தில் எழுந்துள்ளது. அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றால், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய முடியவில்லை. பின், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில், மூன்றாவது குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, இறுதி பட்டியல் தயாரித்துள்ளது. இது, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில், பட்டியலில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற, விவாதம் எழுந்துள்ளது. முன்னாள் துணை வேந்தர், ராஜாராம், தற்போதைய பதிவாளர், கணேசன், கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் கீதா, அண்ணா பல்கலை தொழில்நுட்ப மேம்பாட்டு மைய இயக்குனர், தாமரைச்செல்வி உள்ளிட்டோர் பெயர்கள், பட்டியலில் இருப்பதாக, பல்கலை வட்டாரங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இவர்களில் ஒருவரே, துணை வேந்தராக வாய்ப்புள்ளது என்றும் பேசப்படுகிறது.
இதுகுறித்து, உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அதிகாரப்பூர்வ உத்தரவை, கவர்னர் பிறப்பிப்பார்' என்றனர்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை