மாற்று இருதயம் பொருத்தியவர் உயிரிழப்பு : மதுரை அரசு மருத்துவமனையில் சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்று இருதயம் பொருத்தியவர் உயிரிழப்பு : மதுரை அரசு மருத்துவமனையில் சோகம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை, அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் மாற்று இருதயம் பொருத்தப்பட்ட, மாரிச்சாமி, 48, என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விருதுநகர், சாமிநத்தத்தை சேர்ந்த லாரி டிரைவர், முத்துராஜன், 28, என்பவர், பிப்., 18 ம் தேதி நடந்த வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இவரது இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடலுறுப்புகள் பலருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டன. இதயத்தை, ஒத்தக்கடை சில்வர் பட்டறை ஊழியர், மாரிச்சாமி, என்பவருக்கு, மாற்று அறுவை சிகிச்சை மூலம், அரசு மருத்துவமனை இதயவியல் பிரிவு டாக்டர்கள், பிப்.,22 ம் தேதி, பொருத்தினர். 14 நாட்களாக, அவசர சிகிச்சை பிரிவில் மாரிச்சாமி, கண்காணிக்கப்பட்டு வந்தார்.நேற்று மதியம், 12:45 மணிக்கு, நோய் தொற்று ஏற்பட்டு, மாரிச்சாமி உயிரிழந்தார். டீன் மருதுபாண்டியன் கூறியதாவது:மாற்று இதயம் பொருத்தி, ஒரு வாரத்திற்கு பின் நன்றாக உணவு அருந்தினார். நான்கு நாட்களாக நோய் தொற்று ஏற்பட்டு, நிமோனியா பாதிப்பால், ஒன்றன் பின் ஒன்றாக, நுரையீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை