எஸ்.ஐ., துன்புறுத்தல்: : கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., துன்புறுத்தல்: : கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சை அருகே, எஸ்.ஐ., தரக்குறைவாக பேசி, தாக்கியதாகக் கூறி, கல்லுாரி மாணவர் தற்கொலைக்கு முயன்றார்.தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 20. கல்லுாரி மாணவர். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ் என்பவருக்கும் இடையே, தண்ணீர் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மணிகண்டன் மீது, பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ், அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.காமராஜ் சகோதரர், போலீஸ் எஸ்.ஐ., என்பதால், அம்மாப்பேட்டை எஸ்.ஐ., சசிகுமாருக்கு அழுத்தம் கொடுத்து, வழக்கு பதிவு செய்ய வைத்ததாகவும், நேற்று முன்தினம், கல்லுாரிக்கு சென்ற மணிகண்டனை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று, தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் அவமானம் அடைந்த மணிகண்டன், மாலை வீடு திரும்பியதும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தனது தற்கொலைக்கு, போலீசார் அடித்ததால் ஏற்பட்ட அவமானமே என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவனையில், மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.ஐ., சசிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட எஸ்.பி.,யிடம், மணிகண்டன் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை