சாயம் போகும் நெசவுத்தொழிலின் சாபம் தீருமா : குழு அமைத்து குறைகளைய வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாயம் போகும் நெசவுத்தொழிலின் சாபம் தீருமா : குழு அமைத்து குறைகளைய வலியுறுத்தல்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
சாயம் போகும் நெசவுத்தொழிலின் சாபம் தீருமா : குழு அமைத்து குறைகளைய வலியுறுத்தல்

திண்டுக்கல்: கூலி குறைப்பு, சீனப்பட்டு வருகை, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு போன்றவற்றால், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை, சாயம் போன சேலைபோல மாறிவருவதாக, நெசவாளர்கள் மனம் குமுறுகின்றனர்.
தமிழகத்தில், மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, எமனேஸ்வரம், நெல்லை, காஞ்சிபுரம், கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல நகரங்களில், நெசவாளர்கள் உள்ளனர். தற்போது, இரண்டு லட்சம் கைத்தறிகள் உள்ளன. அதன் உப தொழில்களான, நுால் நுாற்றல், கண்டு சுற்றுதல், பாவு, பொன்னி, பார்டர் போடுதல் போன்றவற்றிலும், பலர் வேலை செய்கின்றனர். இத்தொழிலை நம்பி, ஐந்து லட்சம் பேருக்கு மேல் பணியில் உள்ளனர்.தற்போது இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் மிஷின் எம்ராய்ட்ரிங் செய்யப்படுகிறது. விலையும் குறைவு. இதனால் கைத்தறி தொழில் நசிந்துள்ளது. வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவுகளை கூட செய்ய முடியாமல், நெசவாளர்கள் திணறுகின்றனர். இதனால், தற்போது மாற்றுத் தொழிலை அவர்கள் தேடி வருகின்றனர்.முன், 25 நாட்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கூலி கிடைத்தது. தற்போது ஏழாயிரம் ரூபாய் தான் கிடைக்கிறது. இதில், உபதொழில் செய்வோருக்கு 300 ரூபாய் கூலி தர வேண்டியுள்ளது. குடும்பத்துடன், இரவு, பகல் நெய்தால் கூட, கூலி கிடைப்பதில்லை.
ஜி.பிரேமாதிண்டுக்கல் நாகல்நகர் நெசவாளர்
ஒரு கிலோ பட்டுநுால் 4,000 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 6,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. எம்.ஜி.ஆர்., காலத்தில், நெசவாளர் துயர் களைய ஒரு ஆய்வு குழுவை அமைத்தார். அதேபோல ஒரு குழுவை நியமித்து, குறைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கே.கிருஷ்ணமூர்த்திபொது கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க தலைவர்
கைத்தறி மூலப்பொருட்கள் வாங்குவதற்கும், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கின்றனர். நெய்த பொருளை விற்பதற்கும், ஜி.எஸ்.டி., வரி விதிக்கின்றனர். இதனால் தொழில் நசிகிறது. ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தரம் குறைந்த சீன பட்டை, பெங்களூரு பட்டுடன் கலந்து விற்பனை செய்கின்றனர். மூன்றடி நீளம் நெய்வதற்கு, ஒரு மணிநேரத்திற்கு பதிலாக, ஒன்றரை மணிநேரம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப கூலி கிடைப்பதில்லை.
வி.ஆர். சாந்திலால்செயலாளர்
ஜி.எஸ்.டி., 5 சதவீதம் விதித்துள்ளனர். இதனால் வேலை குறைந்து, நாங்கள் திணறுகிறோம்.
எஸ்.எஸ்.கணேஷ்பாரதிபுரம்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suman - Bangalore,இந்தியா
09-மார்-201817:49:16 IST Report Abuse
suman ஏழை நெசவாளர்களின் இந்த சிரமங்களை முடிந்த அளவு குறைப்பதற்காக திரு சகாயம் IAS அவர்கள் தந்த திட்டம்தான் மக்கள் பாதை தறி திட்டம் மேலும் அறிய மக்கள் பாதை வலைத்தளம் பார்க்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை