டில்லியில் காவிரி ஆலோசனை கூட்டம்: 63 டி.எம்.சி., நீர் கேட்க தமிழகம் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டில்லியில் காவிரி ஆலோசனை கூட்டம்: 63 டி.எம்.சி., நீர் கேட்க தமிழகம் முடிவு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா நிலுவை வைத்துள்ள, 63 டி.எம்.சி., நீரை, உடனடியாக வழங்கும்படி, டில்லியில், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, 192 டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீரை, 177.25 டி.எம்.சி.,யாக குறைத்து, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம், டில்லியில், இன்று நடக்கிறது. மத்திய நீர்வள அமைச்சகம், இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் தரப்பில், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர், பிரபாகர், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர், சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட உள்ளது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் கோடைக்கால தேவைக்காக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, 63 டி.எம்.சி., நீர் திறக்கவும் கோரிக்கை விடப்படவுள்ளது.
இதுகுறித்து, காவிரி தொழிற்நுட்ப பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, 177.25 டி.எம்.சி., நீரை, மே மாத இறுதிக்குள், கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதுவரை, 114 டி.எம்.சி., நீரை மட்டுமே, கர்நாடக வழங்கியுள்ளது; எஞ்சிய, 63.25 டி.எம்.சி., நீரை வழங்கினால், தமிழகத்தின் கோடைக்கால குடிநீர் தேவை பூர்த்தியாகும்.எனவே, மார்ச் இறுதிக்குள், 10 டி.எம்.சி., தண்ணீரை, காவிரியில், கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என, இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை