'பைலட்' அறையில் புகை : விமானம் தரையிறக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பைலட்' அறையில் புகை : விமானம் தரையிறக்கம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: விமானத்தில், 'பைலட்' அறையில் திடீரென புகை மூட்டம் எழுந்ததால், அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்கப்பட்டது.சிங்கப்பூரில் இருந்து துபாய்க்கு, 298 பயணிகள், இரண்டு பைலட்டுகள் மற்றும், 15 விமான சிப்பந்திகள் என, 315 பேருடன், 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 'காக்பிட்' எனப்படும், பைலட் அறையில், திடீரனெ புகை மூட்டம் எழுந்தது.இதையடுத்து, அருகில் இருந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,யை தொடர்பு கொண்ட பைலட், விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.அந்த விமானம், காலை, 11:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக, பயணியர் அனைவரும், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள், விமான புகை மூட்டம் எழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். 'கோளாறு சரி செய்யப்பட்ட பின், அந்த விமானம், துபாய் புறப்பட்டுச் செல்லும்' என, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை