மின் வாரிய தலைவர் திடீர் மாற்றத்தால் அதிருப்தி Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அதிருப்தி
மின் வாரிய தலைவர் திடீர் மாற்றத்தால்...

மத்திய அரசின், தர மதிப்பீட்டு பட்டியலில், ஒரே ஆண்டில், தமிழகத்தை ஒன்பது இடங்களுக்கு முன்னேற்றிய, மின் வாரிய தலைவர், சாய்குமாரை, திடீரென இடமாற்றம் செய்தது, ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மின்வாரியம், சாய்குமார், மாற்றம், அதிருப்தி

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம், நிலக்கரி, உபகரணம் வாங்கியதால், மின் வாரியம், நிதி நெருக்கடியில் தவித்தது. இந்நிலையில், 2014 டிசம்பரில், மின் வாரிய தலைவராக, சாய்குமார் பொறுப்பேற்றார். நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை, சில நேர்மையான அதிகாரிகள், அவரின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.இதையடுத்து, 2015 ஜனவரி முதல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது; சந்தை விலைக்கு, நிலக்கரி வாங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், தனியார் நிலக்கரி வாங்குவதும் நிறுத்தப்பட்டது. உபகரணம் கொள்முதல் உள்ளிட்ட அனைத்து பணிக்கான, 'டெண்டர்'களையும், மின்வாரியம் விண்ணப்ப வடிவில் பெற்றது. அதில், பல முறைகேடுகள் நடந்ததை தடுக்க, இணையதள டெண்டர் முறை

அமல்படுத்தப்பட்டது. அரசியல் சிபாரிசு, பணம் உள்ளவருக்கு மட்டுமே, வேலை வழங்கிய நிலையை மாற்றி, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக ஊழியர்கள் தேர்வு நடந்தது. மின் கட்டணம் செலுத்தாத, அரசு அலுவலகங்களில், மின் சப்ளையும்துண்டிக்கப்பட்டது. மத்திய மின் துறை, மாநில மின் வாரியங்களின், மின் வினியோகம், நிதி உள்ளிட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டுதோறும், தர வரிசை பட்டியல் வெளியிடுகிறது.

அதன்படி, 2014 - 15ல் வெளியிடப்பட்ட பட்டியலில், மொத்தம், 40 மின் பகிர்மான நிறுவனங்கள் இருந்ததில், தமிழ்நாடு மின் வாரியம், 34வது இடத்தில் இருந்தது. சாய்குமார் எடுத்த நடவடிக்கைகளால், அதற்கு அடுத்த ஆண்டில், 41 பகிர்மான நிறுவனங்களில், மின் வாரியம், 25வது இடத்திற்கு முன்னேறியது. ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வந்த, மின் வாரியம், தற்போது, லாபம் ஈட்டும் நிலையில் உள்ளது.

இதனால், 2015 டிசம்பர் முதல் நிலுவையில் இருந்த, ஊதிய உயர்வு, முன் எப்போதும் இல்லாதஅளவாக, சமீபத்தில், 2.57 மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி, மூன்று வாரங்கள் ஆகாத நிலையில், சாய்குமாரை இடமாற்றம் செய்தது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு பின், மின் வாரியம், சிறப்பாக செயல்பட்டதற்கு, சாய்குமார் தான் காரணம்.

Advertisement

அவரை இடமாற்றம் செய்தது, அதிருப்தி அளித்தாலும், முதல்வரின் செயலராக நியமித்தது ஆறுதல் தருகிறது' என்றனர்.

முக்கிய பேரிடர்! :


சென்னை மற்றும் புறநகரில், 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும், 2016ல் வீசிய, 'வர்தா' புயல்; 2017ல், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய, 'ஒக்கி' புயல் ஆகியவை, முக்கிய இயற்கை பேரிடர்களாக உள்ளன. மூன்று நிகழ்வுகளின் போது ம், பாதிக்கப்பட்ட இடங்களில், பல நாட்களுக்கு, மின் வினியோகம் முற்றிலுமாக முடங்கியது. அந்த இடங்களுக்கு, சாய்குமார் நேரில் சென்று, மின் வினியோக பணிகளை முடுக்கி விட்டார்.


-நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மார்-201808:53:21 IST Report Abuse

Srinivasan Kannaiyaதமிழ் நாடு மின்சார வாரிய வளர்ச்சியில் மட்டும் அல்ல தொழிலாளர்களிடம் ஒழுக்கததை கொண்டுவந்தது விஜய ராகவன்,,, அவருக்கு பின்பே குறிப்பிடும் படியாக பூர்ணலிங்கம்... இவர் சாய்ராம் வந்தார் ஆனால் ஊழலை எனோ வளரவிட்டுவிட்டார்...?

Rate this:
Gajageswari - mumbai,இந்தியா
10-மார்-201806:26:39 IST Report Abuse

Gajageswariஇவருடை காலத்தில் தான். அரசு கொடுக்கும் மானியத்தை வேண்டாம் என்று மின்வாரியம் கூறிவிட்டது . ஆனால் கற்றாழை களுக்கு 18 மாத மின்கட்டண பாக்கி உள்ளது

Rate this:
Gopi - Chennai,இந்தியா
09-மார்-201813:50:44 IST Report Abuse

Gopiநல்லவங்க வாழ்ந்தா பிடிக்காதே

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X