2 அணு உலைகளும் பழுது : கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 அணு உலைகளும் பழுது : கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
2 அணு உலைகளும் பழுது : கூடங்குளம் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று, முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும், 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை. இரண்டாவது உலையில், பிப்., 19ல், நீராவி செல்லும் வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்னமும் சரி செய்யப்படவில்லை. நேற்று காலை, 9:30 மணிக்கு, முதலாவது அணு உலையிலும், டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையின் பழுது இன்னமும் ஓரிரு நாளில் சரிசெய்யப்படும் எனவும், இரண்டாவது அணு உலையில், இனி எரிபொருள் நிரப்பி, மின் உற்பத்தி துவங்க ஒரு மாதம் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pu.ma.ko - Chennai,இந்தியா
09-மார்-201820:39:42 IST Report Abuse
pu.ma.ko அணுஉலை பாதி நேரம் கோமாவுலதான் இருக்கு. அதை மூடச் சொல்லி எதுக்கு போராட்டம் பண்ணிக்கிட்டு... போங்கப்பா போய் அவுங்கவுங்க ஜோலிய பாருங்க. வாழ்க்கையில் முன்னேறுங்க.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
09-மார்-201812:36:35 IST Report Abuse
christ ரஷ்யவில் இருந்து தரமற்ற பொருட்களை கொண்டு உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு முன்பே சொல்லப்பட்டது அது நிஜம் என்பதை இன்றய சம்பவம் உறுதி படுத்துகிறது .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201809:03:18 IST Report Abuse
Srinivasan Kannaiya மாநில அரசுதான் பராமரிப்பு செய்யாமல் உற்பத்தி நிலையங்களை பழுதடைய வைக்கிறது என்றால்... மத்திய அரசுமா ...?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-மார்-201807:30:44 IST Report Abuse
Bhaskaran எப்போதேனும் இந்த மூன்று அணு உலைகளும் ஒரே நேரத்தில் ஒருமாதம் தொடர்ந்து இயங்கியதாக வரலாறு உண்டா மக்களின் வரிப்பணம் விரயம்
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-மார்-201807:00:16 IST Report Abuse
Amirthalingam Sinniah அணு உலையில் கசிவு இருக்கிறதா என்பது முக்கியம். அப்பாவிகளின் உயிர்களுக்கு உலை வைத்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
09-மார்-201806:31:09 IST Report Abuse
Rajendra Bupathi இது ஒரு சரியான கட்டமைப்பு இல்லைன்னு ஆரம்பத்துலேயே எல்லாரும் சொன்னாங்க?ஏகபட்ட போராட்டமும் நடத்தியாச்சி?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201802:02:41 IST Report Abuse
Mani . V இது பணத்தை விரயமாக்க துவக்கப்பட்ட திட்டம். மின்சார உற்பத்தி என்பது சும்மா ஜுஜுபி. புதிய அணு உலையில் இவ்வளவு விரைவில் பழுது என்றால் அங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள இயந்திரங்களும், பொருட்களும் தரமற்றவைதானே? (எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலையம் இன்னும் செயல்பாட்டில்தானே இருக்கிறது? எப்படி?).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை