சுபிக் ஷா அதிபர் ஜாமின் கோரி மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுபிக் ஷா அதிபர் ஜாமின் கோரி மனு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: வங்கிகளில் கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில் கைதான, 'சுபிக் ஷா' அதிபர், ஜாமின் கோரி, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை, ௧௨ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சுபிக் ஷா என்ற பெயரில், 'சூப்பர் மார்க்கெட்' கிளைகள் பல்வேறு இடங்களில் இயங்கி வந்தன. இதற்காக, 13 வங்கிகளில், 800 கோடி ரூபாய் கடன் தொகையை, அதன் உரிமையாளர், சுப்ரமணியன் பெற்றார். அந்தப் பணத்தில், பல இடங்களில் சொத்துக்கள் வாங்கினார். இதைஅடுத்து, சுப்ரமணியனுக்கு எதிராக, அமலாக்கப் பிரிவு வழக்கு தொடுத்து, கைது செய்தது.இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில், சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார். விசாரணையை, வரும், ௧௨ம் தேதிக்கு, நீதிபதி, தனசேகரன் தள்ளிவைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை