ஊதிய உயர்வு வேண்டாம் : இப்படியும் ஒரு கோரிக்கை| Dinamalar

ஊதிய உயர்வு வேண்டாம் : இப்படியும் ஒரு கோரிக்கை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஊதிய உயர்வு வேண்டாம் : இப்படியும் ஒரு கோரிக்கை

கியூபெக்,: 'தேவைக்கு அதிகமாகவே வருமானம் ஈட்டுவதால், எங்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை். அந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என்று கனடா டாக்டர்கள் மனு அளித்து வருகின்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது கியூபெக் நகரம். இங்குள்ள அரசு டாக்டர்களுக்கு, சமீபத்தில், ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு டாக்டர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.கியூபெக்கில், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலக ஊழியர்கள் என பலரும், கடினமாக உழைக்கின்றனர்.அதிக பணிச் சுமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு, குறைவான ஊதியமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.மேலும், செவிலியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்கள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்றுவதாக கூறப்பட்டது.இந்நிலையில், 'சக ஊழியர்கள் கஷ்டப்படும்போது, நாங்கள் மட்டும் எப்படி ஊதிய உயர்வை ஏற்க முடியும்' என, டாக்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஏற்கனவே, 'தேவைக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதால், இந்த ஊதிய உயர்வு தேவையில்லை.இந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என, டாக்டர்கள் சார்பில், அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மார்-201814:59:43 IST Report Abuse
PrasannaKrishnan Those panampudungiis can learn from him
Rate this:
Share this comment
Cancel
Murugan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
09-மார்-201814:48:22 IST Report Abuse
Murugan அய்யோ இதை என்னாலா நம்பவே முடியலையே
Rate this:
Share this comment
Cancel
KRK - Kumbakonam,இந்தியா
09-மார்-201808:57:31 IST Report Abuse
KRK இத படிக்கும்போதுதான் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகத்தில் வாழணும்னு ஆசை வருது, இந்த பூமி அழியாதுனு நம்பிக்கை பிறக்குது.
Rate this:
Share this comment
Cancel
Arun -  ( Posted via: Dinamalar Android App )
09-மார்-201808:16:05 IST Report Abuse
Arun Ippadiyum oru country irukutha magilchi
Rate this:
Share this comment
Cancel
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
09-மார்-201805:59:33 IST Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi Some doctors in our country like Tirupati hundi yevalavu kuduthaalum paththathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை