சட்ட கல்லூரிக்கு மார்ச் 11 வரை விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட கல்லூரிக்கு மார்ச் 11 வரை விடுமுறை

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வரும், 11ம் தேதி வரை, சட்ட கல்லுாரிக்கு விடுமுறை அளித்து, நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லுாரி இயங்கி வருகிறது. 1891ல் துவங்கப்பட்ட இக்கல்லுாரி, 124 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கடந்த, 2008 நவ., 12ல், சட்ட கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை விசாரிக்க, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி, சண்முகம் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது.அக்கமிட்டி, சென்னை சட்ட கல்லுாரியை, வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் கிராமம்; திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார் உள்ளிட்ட இடங்களில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, கல்லுாரி இடம் மாற்றம் செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது.இதற்கு, சட்ட கல்லுாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, 26ம் தேதி முதல், கல்லுாரி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், 11ம் நாளாக நேற்றும், போராட்டம் தொடர்ந்தது.ஏற்கனவே, 27ம் தேதி முதல், 7ம் தேதி வரை, கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதையொட்டி, கல்லுாரி நிர்வாகம், பல கட்ட பேச்சு நடத்தியது; இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.எனவே, 11ம் தேதி வரை, விடுமுறையை நீட்டித்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை