காங்கேயம் அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்கேயம் அரிசி ஆலைகளில் வருமான வரித்துறை ரெய்டு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காங்கேயம்: காங்கேயத்தில் உள்ள அரிசி ஆலைகளில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும், கணக்கில் வராத பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், 150 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பல ஆலைகளில், முறையாக வருமான வரி கட்டுவதில்லை எனவும், போலியான பிராண்ட் பெயரில் வெளி மாநிலங்களுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருவதாகவும், கோவை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று காலை, வருமான வரித்துறை உதவி கமிஷனர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், காங்கேயம் - கோவை சாலையில் உள்ள, மகாராஜா குரூப் நிறுவனங்களுக்கு சொந்தமான அரிசி ஆலைகளில் சோதனையை துவக்கினர். இதில் கணக்கில் வராத, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களூம், ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அதற்கு தொடர்புடைய பல அரிசி ஆலைகள், ஆலை அதிபர்களின் வீடுகள், பண்ணை வீடுகளில் சோதனை நடந்தது. இங்கும், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை