தொழில் முனைவோருக்கு துணை முதல்வர் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கு துணை முதல்வர் அழைப்பு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெற உள்ள, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிகம் பேர் பங்கேற்க வேண்டும்,'' என, தொழில் முனைவோர்களுக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், சர்வதேச பொறியியல் தளவாட பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது.கருத்தரங்கை துவக்கி வைத்து, துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியதாவது:தொழில் உற்பத்தியில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, தோல், துணி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. தமிழகம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில், இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு, 2019 ஜனவரியில் நடைபெற உள்ளது. அதில், உலக அளவிலான, தொழில் முனைவோர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் சம்பத், பெஞ்சமின் மற்றும் தொழில்துறை அதிகாரிகள், தொழில் முனைவோர் பங்கேற்றனர். 120 அரங்குகள் இடம் பெற்றுள்ள கண்காட்சி, இன்று நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-மார்-201815:00:26 IST Report Abuse
Pasupathi Subbian அட பழயபடி அந்த இருபது சதவிகிதமாவது கொடுங்களேன். ஆட்களே வருவதில்லை, வருமானம் குறைவாய் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X