தமிழக கலாசார புகழை பரப்புங்கள்! : கைவினைஞர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கலாசார புகழை பரப்புங்கள்! : கைவினைஞர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
தமிழக கலாசார புகழை பரப்புங்கள்!  : கைவினைஞர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: ''கைவினைஞர்கள், தமிழக கலாசார புகழை, உலக அளவில் பரப்ப வேண்டும்,'' என, கைவினைஞர்கள் தின விழாவில், முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.கைவினைஞர்களை போற்றும் விதமாக, மார்ச், 5ம் தேதியை, கைவினைஞர்கள் தினமாக, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான விழா, சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி, விழா மலரை வெளியிட்டார்; துணை முதல்வர், பன்னீர்செல்வம் பெற்றார்.பின், கைவினைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, முதல்வர் பேசியதாவது:தமிழக கைவினைஞர்கள் வளர்ச்சிக்காக, பூம்புகார் நிறுவனம் துவக்கப்பட்டது. திருப்பதி உள்ளிட்ட, பல கோவில் தங்கத் தேர்கள், பூம்புகார் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனம், நவீன தகவல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 41 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது. இதன் மூலம், ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கடந்த, 13 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில், இந்நிறுவனம் நடத்தப்படுகிறது. வெளிநாட்டு சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. கைவினைஞர்களை, உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில், தனி வலைதளம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில், விரைவில் பூம்புகார் விற்பனையகம் திறக்கப்படும்.இதுவரை, எட்டு கைத்திறன் தொழில் சார்ந்த பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. கைவினைஞர்கள், தமிழக கலாசார புகழை, உலகளாவிய அளவில் கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பூம்புகார் நிறுவன சிறப்பு திட்டங்களான, மகாபலிபுரத்தில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான நகர்புற குடில், 'கிராப்ட் கபே' சென்னை தலைமை அலுவலத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றை, முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், ஊட்டியில், நகர்புற கண்காட்சி குடில் அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
09-மார்-201807:20:11 IST Report Abuse
Amirthalingam Sinniah உங்களுடைய ஊழல்கள்தான் உலகெல்லாம் பரவியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X