இந்திய டாக்டருக்கு அமெரிக்க விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய டாக்டருக்கு அமெரிக்க விருது

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சர்க்கரை நோய் குறித்து, சிறப்பாக பணியாற்றியமைக்காக, இந்திய டாக்டருக்கு, அமெரிக்க விருது வழங்கப்பட உள்ளது. அமெரிக்கன் சர்க்கரை அமைப்பு என்ற நிறுவனம், சர்க்கரை நோய் மருத்துவத்தில், சிறப்பாக செயல்படுவோருக்கு, ஆண்டுதோறும் ஹரோல்ட் ரிப்ரிகன் சர்வதேச சேவைக்கான விருதை வழங்கி வருகிறது. இதில், இந்த ஆண்டுக்கான விருதை, டாக்டர் மோகன் சர்க்கரை நோய் மையத்தின், தலைவர் மோகன் பெற உள்ளார்.இவ்விருதை பெறும் முதல் இந்தியர் ஆவார். இவர், இது வரை சர்க்கரை நோய் தொடர்பான 1110 புத்தகங்கள், 718 கட்டுரைகள், 235 மதிப்பாய்வு கட்டுரைகள் மற்றும் 150 பாட நுால்களை எழுதி உள்ளார். மேலும், பத்மஸ்ரீ விருது, இந்திய மருத்துவ கவுன்சிலின், டாக்டர் பி.சி.ராய் விருது, மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர். அம்பேத்கர் விருது, உள்பட 160 விருதுகளை பெற்றுள்ளார். வருகிற, ஜூன்., 25ல், ஒர்லேண்டோவில் நடைபெறும், 78வது அறிவியல் அமர்வுகள் மாநாட்டில், இவ்விருதினை பெற உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை