தாயை பிரிந்து தவித்த சிறுத்தைக்குட்டி மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாயை பிரிந்து தவித்த சிறுத்தைக்குட்டி மீட்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தாயை பிரிந்து தவித்த சிறுத்தைக்குட்டி மீட்பு

வால்பாறை: வால்பாறை அருகே தாயை பிரிந்து, தனியாக தவித்த சிறுத்தைக் குட்டியை, வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன், ஊசிமலை எஸ்டேட் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை சிறுத்தை கொன்றது. இந்நிலையில், நேற்று சவராங்காடு எஸ்டேட் பகுதியில், தாயை பிரிந்த சிறுத்தைக் குட்டி ஒன்று, தனியாக தவிப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறுத்தைக் குட்டியை மீட்டு, வன உயிரின மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது: தாயை பிரிந்து தனியாக தவித்த, மூன்று மாத பெண் சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது. அப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சிறுத்தை சுற்றுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதற்கான அறிகுறிகளும் அங்கு தென்பட்டன. கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை குட்டி, சிறுத்தை விட்டு சென்ற அதே பகுதிக்கு, இரவில் கொண்டு சென்று, பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்படும். குட்டியை தேடிவரும் சிறுத்தையை பின் தொடர்ந்து, அதன் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை