வடமதுரை கிணற்றில் பிணமாக மிதந்த 3 ஒடிசா தொழிலாளர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமதுரை கிணற்றில் பிணமாக மிதந்த 3 ஒடிசா தொழிலாளர்கள்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை: வடமதுரையில் கோஷ்டி தகராறில் தப்பியோடிய ஒடிசா மாநில தொழிலாளர் மூவர் கிணற்றில் பிணமாக மிதந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரெட்டியபட்டி பிரிவு அருகில் 'ஷெட்'கள் அமைத்து ஒடிசா மாநில தொழிலாளர் தங்கி நுாற்பாலையில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் சிலர் பெண் தொழிலாளியை கேலி செய்தனர். இதை கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்ததொழிலாளர்கள் கண்டித்தனர். இதனால் மார்ச் 6ம் தேதி இரவு இரு தரப்பினரும் மரக்கட்டைகளால் தாக்கி கொண்டனர்.ஒடிசா தொழிலாளர்கள் தப்பியோடினர். இது தொடர்பாக நேற்று காலை வடமதுரை போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.கிணற்றில் மிதந்த மூவர்இந்நிலையில் நேற்று மாலை ஒடிசா தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிக்கு பின்னால் பயன்பாடற்ற கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. ஒடிசா தொழிலாளர்கள் மூவர் உடல்கள் மிதந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பைத்யநாத் தாலே, சாம்தான் முன்டே, போலோ மாலிக் வேடசந்துார் தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களை மீட்டனர். தகராறின் போது தப்பியோடியவர்கள் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை