ஒரே நிறத்தில் 3 கார்கள் திருட்டு செம்மரம் கடத்தலுக்காகவா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நிறத்தில் 3 கார்கள் திருட்டு செம்மரம் கடத்தலுக்காகவா

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
ஒரே நிறத்தில் 3 கார்கள் திருட்டு செம்மரம் கடத்தலுக்காகவா

சென்னை: காவலுக்கு இருந்த நாய்க்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த மர்ம நபர்கள், ஒரே நிறத்தில் இருந்த, மூன்று கார்களை திருடிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.புழல் அடுத்த புதிய லட்சுமிபுரம், செங்குன்றம் - செம்பியம் சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த, ஜான் வில்லியம், 44, என்பவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு, அலுவலக கோடவுனில், 16 கார்கள் இருந்தன. வழக்கம் போல், நேற்று காலை, 9:00 மணி அளவில், கோடவுனை திறக்க, ஜான் வில்லியம் சென்றார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மூன்று சொகுசு கார்கள், வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், ஸ்கார்பியோ, ஐ - 20, ஆம்னி ஆகிய மூன்று கார்கள் திருடு போயிருந்தன. மூன்றும், அடர்ந்த சிமென்ட் நிற கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.புழல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மர்ம நபர்கள், நேற்று அதிகாலை, 3:30 மணி முதல், 4:30 மணிக்குள் கார்களை திருடியது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அலுவலக பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அங்கு காவலுக்கு இருந்த நாய்க்கு, அதன் விருப்பமான உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதனால், நாய் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அடங்கியது. அலுவலக அறையில், மொத்தமாக இருந்த கார் சாவிகள் மூலம், தேவையான கார்களை திருடிச் சென்றனர். மர்ம நபர்கள் குடோனுக்குள் நுழைந்த சில நிமிடங்களுக்கு பின், கண்காணிப்பு கேமராக்களை, கூரையை நோக்கி திசை திருப்பி வைத்துள்ளனர். குடோனில் இருந்த, விலை உயர்ந்த சொகுசு கார்களை திருடாமல், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரே நிறம் கொண்ட, மூன்று கார்களை திருடிச் சென்றது கேள்விக்குறியாகி உள்ளது.அந்த கார்களை, கொலை, ஆள் கடத்தல், செம்மரக் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தலாம் என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் திருடர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
09-மார்-201810:26:59 IST Report Abuse
Muthukrishnan,Ram இத்தனை விலை உயர்ந்த பொருள்கள் உள்ள இடத்தில் நாயும், கேமராவும் போதுமா? ஏன் இரவு பணிக்காக ஒரு செக்கியூரிட்டி போட்டால் என்ன? சம்பாதிப்பது பெரிய விஷயம், அதை பாதுகாப்பது அதை விட பெரிய விஷயம். இன்னும் கவனம் தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X