தினகரனுக்கு எதிரான வழக்கு முடிக்க 2 மாதம் அவகாசம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தினகரனுக்கு எதிரான வழக்கு முடிக்க 2 மாதம் அவகாசம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரனுக்கு எதிரான, அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை முடிக்க, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, கூடுதலாக இரண்டு மாத அவகாசத்தை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது.ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டு நிறுவனத்தின் வங்கி கணக்கில், கோடிக்கணக்கில் பணம், 'டெபாசிட்' செய்ததாக, தினகரனுக்கு எதிராக, அமலாக்கப் பிரிவு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கில், தினகரனுக்கு எதிராக, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ், குற்றச்சாட்டுக்களை ரத்து செய்தார். குற்றச்சாட்டுக்கள் குறித்து, எழும்பூர் நீதிமன்றத்தில் வாதங்களை வைக்கும்படி, தினகரனுக்கு உத்தரவிட்டார். மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கவும், தேவைப்பட்டால் அன்றாடம் விசாரணை நடத்தும்படியும், மாஜிஸ்திரேட்டுக்கு, நீதிபதி, ரமேஷ் உத்தரவிட்டார். ௨௦௧௭ ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், கூடுதலாக இரண்டு மாதம் அவகாசம் கேட்டு, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, எழும்பூர் மாஜிஸ்திரேட் கடிதம் அனுப்பினார். இந்த கடிதம், நீதிபதி, எம்.எஸ்.ரமேஷ் முன், தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, விசாரணையை முடிக்க, எழும்பூர் நீதிமன்றத்துக்கு, கூடுதலாக இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி, நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X