சபரிமலை பாத்திர ஊழல்: மாஜி அதிகாரி சஸ்பெண்ட்| Dinamalar

சபரிமலை பாத்திர ஊழல்: மாஜி அதிகாரி சஸ்பெண்ட்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சபரிமலை: சபரிமலைக்கு பாத்திரங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக மாஜி தேவசம்போர்டு செயலாளர் ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவர் காங்., ஆட்சியில் தேவசம்போர்டு அமைச்சராக இருந்த சிவகுமாரின் சகோதரர் ஆவார்.சபரிமலையில் நான்கு முறை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் ஜெயக்குமார். பின்னர் இவர் தேவசம்போர்டு செயலாளராக பதவி ஏற்றார். நிர்வாக அதிகாரியாக இருக்கும் போது பாத்திரம் வாங்கியதில் ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக தணிக்கை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதை விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இந்நிலையில் காங்கிரசின் போர்டு கலைக்கப்பட்டு இடது முன்னணி போர்டு பொறுப்பேற்றது. தலைவர் பத்மகுமார் இது தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தினார். இந்நிலையில் போர்டு செயலாளராக இருந்த ஜெயக்குமாரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.விஜிலென்ஸ் விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கை கிடைத்ததை தொடர்ந்து ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை