கோடை மழை தாமதம் முதுமலையில் கடும் வறட்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடை மழை தாமதம் முதுமலையில் கடும் வறட்சி

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கோடை மழை தாமதம் முதுமலையில் கடும் வறட்சி

கூடலுார்: கோடைமழை பெய்யாததால், முதுமலை, கடும் வறட்சியில் சிக்கியுள்ளது. யானை உள்ளிட்ட வன விலங்குகள், கேரள வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், 321 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. தற்போது, இங்கு கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது. மசினகுடி, கார்குடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில், வறட்சி பாதிப்பு அதிகமாக உள்ளதால், புற்கள், தாவரங்கள் கருகியுள்ளன; மரங்கள் இலை உதிர்ந்து எலும்பு கூடு போல மாறியுள்ளன.வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று தொட்டிகளில் ஊற்றும் பணி நடக்கிறது.வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருவதால், விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், ஓரளவு பசுமையாக உள்ள, நெலாகோட்டை, கூடலுார் பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றை ஒட்டிய ஓவேலி போன்ற பகுதிகளுக்கு வனவிலங்குகள் இடம் மாறி வருகின்றன. யானை உள்ளிட்ட பெரிய விலங்குகள், கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் காடுகளுக்கு இடம் மாறுகின்றன.வனத்துறையினர் கூறுகையில், 'கோடைகாலத்தில், வனவிலங்குள் இடம் மாறும் நிலை ஏற்படுவது வழக்கம். நடப்பு ஆண்டில், வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை