அய்யாகண்ணுவை கன்னத்தில் அறைந்த பா.ஜ.,பெண் நிர்வாகி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அய்யாகண்ணுவை கன்னத்தில் அறைந்த பா.ஜ.,பெண் நிர்வாகி

Added : மார் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி: திருச்செந்துார் கோயில் முன்பாக துண்டு பிரசுரம் கொடுத்த விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணுவை பா.ஜ.,பெண் நிர்வாகி கன்னத்தில் அறைந்தார்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு. மார்ச் முதல் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் துவங்கியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம், நஞ்சில்லா விவசாயம், மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தாதீர் போன்றபிரசாரங்களை செய்து வருகிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு அய்யாகண்ணு திருச்செந்துார் கோயில் வாசலில் நின்று பக்தர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு வந்த பா.ஜ., மாவட்ட நிர்வாகி நெல்லையம்மாள், கோயில் முன்பு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என கூறி வாக்குவாதம் செய்தார். அப்போது நெல்லையம்மாள், திடீரென அய்யாகண்ணுவின் கன்னத்தில் அறைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.அய்யாகண்ணு கூறுகையில்,கோயில் முன்பு துண்டு பிரசுரம் கொடுக்க கூடாது என கூறி , பா.ஜ., வை சேர்ந்த பெண் ் தாக்க முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் தடுத்து விட்டனர். இது குறித்து புகார் எதுவும் கொடுக்கவில்லை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
09-மார்-201811:15:51 IST Report Abuse
Ramanathan Balakrishnan அய்யா கண்ணு அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியது யார் காதிலும் விழவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
09-மார்-201809:30:31 IST Report Abuse
G.MUTHIAH அய்யாக்கண்ணுவை ,முதலில் பா.ஜ., பெண் நிர்வாகியால் தாக்கப்பட்டுஉள்ளது பற்றி திருச்செந்தூர் கோயிலில் உள்ள முருகன் தண்டனை கொடுபபார்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-மார்-201807:20:45 IST Report Abuse
Bhaskaran அராசாகப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை