பழநி பகுதியில் மிரட்டும் 'கொம்பன்' யானை : விவசாயி காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி பகுதியில் மிரட்டும் 'கொம்பன்' யானை : விவசாயி காயம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி: பழநி அருகே பாலாறு, பொருந்தலாறு பகுதியில், சிலநாட்களாக உலாவரும் ஒற்றை (கொம்பன்) யானை, மிரட்டியதில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வறட்சி காரணமாக, உணவு, தண்ணீர் தேவைக்காக, யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் பாலாறு- - பொருந்தலாறு, வரதமாநதி அணை, கோடைகால நீர்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை, இரவு நேரத்தில் உலா வருகின்றன.இதில் ஒற்றை யானை மட்டும் கடந்த சிலநாட்களாக பாலாறு - -பொருந்தலாறு கிராமப்பகுதியில் ஆஞ்சநேயர்கோயில், தர்கா உள்ளிட்ட பகுதியில் இரவில் தங்கி அருகேயுள்ள தோப்புகளை சேதப்படுத்துகிறது. நேற்றுமுன்தினம் இரவு தர்கா அருகே நெற்கதிர்களுக்கு பாதுகாப்பிற்காக படுத்திருந்த ராமசாமி,45, யானையை பார்த்து மிரண்டு ஓட்டம் பிடித்தார். விழுந்து எழுந்ததில் அவர் காயமடைந்தார். இதனால்அப்பகுதியில் விவசாயிகள், பொது மக்கள் இரவு நேரத்தில் தோட்டங்களில் தங்குவதற்கு அச்சப்படுகின்றனர். யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி வனவர் கணேஷ்ராம் கூறுகையில், ''யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து விளைநிலங்களுக்குள் வராமல் விரட்டுகிறோம். ஒற்றையானை அதன் வழித்தடத்தில் வந்துசெல்கிறது. விவசாயி காயம் குறித்து புகார் வரவில்லை'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை