கணவர் கொலை வழக்கு மகளிர் தினத்தில் பெண் விடுதலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணவர் கொலை வழக்கு மகளிர் தினத்தில் பெண் விடுதலை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் கணவரை கொலை செய்த வழக்கில் மனைவியை விடுதலை செய்து கோர்ட் தீர்ப்பளித்தது.தனுஷ்கோடி அருகே கம்பிப்பாடை சேர்ந்தவர் மாலதி, 28, இவரது கணவர் மகேந்திரன்.2013 ஜூன் 28 ல் மகேந்திரன், மனைவி மாலதி மீது சந்தேகப்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே நின்று எப்படி மாங்காய் நறுக்கலாம், என தகராறு செய்துள்ளார். இதில் தவறிய கத்தி மகேந்திரன் மார்பில் பாய்ந்தது. இதில் மகேந்திரன் பலியானார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை இருந்தது. இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட மாலதி 76 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டி.லிங்கேஸ்வரன், தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது: கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமானது. அதனை சந்தேகப்படுவது தவறு, இன்று(நேற்று) மகளிர் தினம், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, இந்த சம்பவம் நடக்கவில்லை. இதனை கொலை என கருத முடியாது. இதனால் அவர் சிறையில் இருந்த 76 நாட்களை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்வதாக, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மார்-201802:37:54 IST Report Abuse
தமிழ்வேல் இதில் தவறிய கத்தி மகேந்திரன் மார்பில் பாய்ந்தது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X