பாலியல் புகார் செய்ய குழு :உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகார் செய்ய குழு :உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ஒரு பள்ளிஆசிரியை, 'தலைமை ஆசிரியர் இரட்டை அர்த்த வசனம் பேசி தொந்தரவு செய்தார்,' என போலீஸ், மாநில மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார்.

கல்வித்துறை விசாரிக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. ஆசிரியை, 'உச்சநீதிமன்ற உத்தரவுபடி புகார் குழு அமைத்து விசாரித்து, தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' எனஉயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு: பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கும் மற்றும் தீர்வு காணும் சட்டப்படி உள் விசாரணை குழுவை அரசுஅமைக்க வேண்டும். மனுதாரரின் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும்.

இதுகுறித்த சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கீழ்நிலையில் உள்ள அலுவலர்களுக்கு 6 வாரங்களில் அனுப்ப வேண்டும். மனுதாரர் மற்றும் தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்ய வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை