ஏழைகளுக்கான ரேஷன் பொருள் மானியத்தை... விட்டுக்கொடு... தப்பைத்தடு...!கோவையில் மறுத்தது வெறும் 400 பேர் மட்டுமே!| Dinamalar

தமிழ்நாடு

ஏழைகளுக்கான ரேஷன் பொருள் மானியத்தை... விட்டுக்கொடு... தப்பைத்தடு...!கோவையில் மறுத்தது வெறும் 400 பேர் மட்டுமே!

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
ஏழைகளுக்கான ரேஷன் பொருள் மானியத்தை... விட்டுக்கொடு... தப்பைத்தடு...!கோவையில் மறுத்தது வெறும் 400 பேர் மட்டுமே!

கோவை மாவட்டத்தில் பத்து லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில், 400 பேர் மட்டுமே, 'ரேஷன் பொருள் வேண்டாம்' என்று மனமுவந்து, மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.கல்வியறிவு, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள மாவட்டம், கோவை. தொழில் முனைவோர் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கானோர், இங்கு வருமான வரி செலுத்துகின்றனர்.
புயல், வெள்ளம், பூகம்பம் என, நாட்டின் எந்த மூலையில் பாதிப்பு ஏற்பட்டாலும், முதலில் உதவிக்கரம் நீள்வது இங்கிருந்து தான். அதேபோன்று, சமூக நலனுக்காக ஒன்று கூடும் மக்களும் இங்கு அதிகம். மத்திய அரசின் அழைப்பை ஏற்று, காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள், இங்கு பல ஆயிரம் பேர். ஆனால், ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை மறுப்பதில், கோவை மிகவும் பின் தங்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள 1,402 ரேஷன் கடைகளில், 9 லட்சத்து, 75 ஆயிரத்து 436 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த கார்டுதாரர்களுக்கு புழுங்கல், பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், கெரசின் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன.ஆனால், பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்களை வாங்கி பயன் படுத்துவதில்லை; மாறாக, கார்டு காலாவதி ஆகாமலிருக்க, பொருட்களை வாங்கியதாக பதிவு செய்ய அனுமதிக்கின்றனர்; இல்லாவிட்டால், வேலையாளுக்கு வாங்கித் தருகின்றனர். ரேஷன் பொருட்கள், கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதற்கு, இதுவே முதற்காரணம். கேரளாவுக்கு அரிசி கடத்தலுக்கும் இது பெரிதும் உதவுகிறது.
இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே, பொது வினியோகத்திட்ட இணையதளத்திலுள்ள 'மொபைல் ஆப்' வாயிலாக, 'தங்களுக்கு பொருட்கள் வேண்டாம்' என்று ரேஷன் மானியத்தை மறுக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வையும் வழங்கல் துறை செய்து வருகிறது.ஆனால், கோவை மாவட்டத்தில், 10 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில், 400 பேர் மட்டுமே, இதற்கு மனு செய்துள்ளனர். மாநில அளவில், இது மிகவும் குறைவாகும்; கோவை மாவட்ட மக்கள் நினைத்தால், மானியத்தை விட்டுக் கொடுத்து, தவறுகளைத் தடுக்கலாம்; தேசத்துக்கே முன் மாதிரியாக மாறலாம்.
மறுப்பது எப்படி?
tnepds என்ற 'வெப்சைட்டிற்கு' சென்று, அதில் 'பொருள் உரிமம் விட்டுக்கொடுத்தல்' என்பதை, 'கிளிக்' செய்து, 'மொபைல்' எண்ணை குறிப்பிட்டால், அதில் ஒரு ரகசியக்குறியீடு நமக்கு கிடைக்கும்; அதை பதிவு செய்து 'டிக்' செய்தால், பொருள் விட்டுக்கொடுப்பது தற்காலிகமா, நிரந்தரமா என்று கேட்கும். கால அளவைக் குறிப்பிட்டால் போதும். அதே போல், 'கூகுளில்' tnepds 'பிளே ஸ்டோர்'க்கு' சென்று, செயலியை பதிவிறக்கம் செய்தும், மானியத்தை விட்டுக்கொடுப்பதை பதிவு செய்யலாம்.-நமது நிருபர்-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan Amirdhakadesan - Thiruvottiyur,இந்தியா
09-மார்-201808:28:01 IST Report Abuse
Kannan Amirdhakadesan அவரவர் பொருளாதாரத்தை கண்டறிந்து அதற்கேற்ற பொது விநியோகத்தை அரசே நிர்ணயம் செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை