வசூல் ஆஹா..! வசதி 'உஹூம்'மாநகராட்சியில் மக்கள் கடும் அவதி :சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சுணக்கம்| Dinamalar

தமிழ்நாடு

வசூல் ஆஹா..! வசதி 'உஹூம்'மாநகராட்சியில் மக்கள் கடும் அவதி :சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சுணக்கம்

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018
Advertisement
வசூல் ஆஹா..!  வசதி  'உஹூம்'மாநகராட்சியில் மக்கள் கடும் அவதி :சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சுணக்கம்

திருப்பூர்:மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், வரி வசூல் மையங்களில், அதற்கான சிறப்புஏற்பாடுகளை செய்து தருவதில் அக்கறை காட்டுவதில்லை.
நடப்பாண்டுக்கான தொழில், சொத்து, குடிநீர் வரிகளை, மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. இதற்காக, மாநகராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், குமரன் காம்பளக்ஸ் ஆகிய இடங்களில், வரி வசூலிக்கப்படுகிறது.
காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, இங்குள்ள வரி வசூல் மையங்களில், பொதுமக்கள் வரியை செலுத்துகின்றனர்.நடப்பாண்டுக்கான வரி வசூல் செய்ய, குறுகிய நாட்களே உள்ளன; ஆனால், இதற்கான எவ்வித சிறப்பு ஏற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் செய்யாமல் இருப்பது, மக்களை பல்வேறு வகையில் அவதிக்குள்ளாக்கி வருகிறது.
மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள் தவிர, மற்ற இடங்களில் ஒன்றிரண்டு கவுன்டர்கள் மட்டுமே இருப்பதால், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு, போதிய இருக்கை வசதியோ, அடிப்படை தேவைகளோ செய்யப்படவில்லை.இதனால், வரி செலுத்துவதற்கு, பிரதான அலுவலகத்தை நாடியே, அதிகம் பேர் வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், ஐந்து கவுன்டர்களில் வரி வசூல் செய்யப்பட்டு வந்தாலும், மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.
கைக்குழந்தையோடு வரும் பெண்கள், நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தாய்மார்கள், முதியவர்கள் அமருவதற்கு இருக்கையோ, கோடை நேரத்தில் தாகம் தணிக்க, குடிநீர் வசதியோ இல்லை. நீண்ட நேரம் நிற்க முடியாமல் பெண்கள் உள்ளிட்ட பலர், படிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் அமரும் அவலம் உள்ளது. வரி வசூலில் ஆர்வத்தை காட்டும் மாநகராட்சி நிர்வாகம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதிலும் காட்ட வேண்டும்.
அதேபோல், ஆர்வமாக பொதுமக்கள் வரி செலுத்த வந்தாலும், கூடுதல் கவுன்டர்கள் இல்லாதால், இப்பணி மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.கடந்த சில நாட்களில், தினமும் ஏறத்தாழ, 70 முதல், 90 லட்சம் ரூபாய் வரை வரி வசூலாகி வருகிறது.அதிக கூட்டமுள்ள வரிவசூல் மையங்களை, மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, கூடுதல் பணியாளர்கள், கவுன்டர்களை ஏற்படுத்தினால், வரி வசூல் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை