கர்ப்பிணி பலி: உயர்நீதிமன்றத்தில் முறையீடு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி பலி: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: திருச்சி திருவெறும்பூரில் நேற்று முன்தினம், டூவீலரை இன்ஸ்பெக்டர் காமராஜ் காலால் எட்டி உதைத்ததில், அதில் பயணம்செய்த கர்ப்பிணி உஷா பலியானார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமியின் உதவியாளர் பாத்திமா நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு முன் ஆஜரானார்.பாத்திமா,''சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,''என்றார். இதுபோல் வழக்கறிஞர்கள் டி.எஸ்.ஆர்.வெங்கட்ரமணா, நீலமேகம் வலியுறுத்தினர்.நீதிபதிகள்,' நீதிமன்றபதிவுத்துறையை அணுகவும்,' என்றனர். பாத்திமா, 'உஷா குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X