திராவிட கட்சிகளைவிட சிதம்பரம் ஊழல் பெரியது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட கட்சிகளைவிட சிதம்பரம் ஊழல் பெரியது

Added : மார் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement

திண்டுக்கல்: ''திராவிட கட்சிகளின் ஊழலை விட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஊழல் பெரியதாக உள்ளது,'' என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: சிதம்பரம், வங்கி மூலம் விரும்பிய எல்லோருக்கும் செக்கியூரிட்டி இல்லாமல் கடன் கொடுத்துள்ளார். இதனால் ரூ. பல லட்சம் கோடி வராக்கடன்கள் உள்ளன.2014ல் காங்., தோல்வியுற்று முடிவு வருவதற்கு 2 நாட்களுக்குள், தங்கம் இறக்குமதி செய்து, 2 நாளில் நகைகளாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் நகையாக மாறுவதற்கு 35 நாட்கள் தேவைப்படும். ஆனால் அவசர, அவசரமாக ஏற்றுமதி, இறக்குமதி நடந்துள்ளது.குறிப்பிட்ட 7 கம்பெனிகளுக்கு மட்டும் தங்கம் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது. இது நிரவ்மோடி, ஜோஷி, கீதாஞ்லி ஜோஷி ஆகியோரின் 7 கம்பெனிகளுக்கு மட்டுமே நடந்துள்ளது. இதற்கு வரி குறைப்பால் ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளது.சிதம்பரம் மகன் கார்த்தி 14 நாடுகளில் ரூ.14 ஆயிரத்து 500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். சிதம்பரத்தின் ஊழல் திராவிட கட்சிகளின் ஊழலை விட மிக பெரியதாக உள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமியம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்த வேண்டும்.தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் தலத்தில் இல்லை. பல இடிந்து, ஆக்கிரமிப்பில், பூஜை நடக்காமல் உள்ளது. பல கோயில்கள் கட்டடங்களாக, ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ், ஓட்டல்களாக மாறியுள்ளன. என்றார்.
சிதம்பரமும் கைது செய்யப்படலாம் : காரைக்குடியில் கூறியதாவது: கார்த்தி 'அட்வான்டேஜ் ஸ்டேட்டிஜிக் கன்சல்டிங்' எனும் நிறுவனம் மூலமாக 14 நாடுகளில் செய்துள்ள மூலதனம் 14,500 கோடி. பல நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மூலதனம் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்ட ஆவணங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்காது. தேவைப்பட்டால் சிதம்பரம் கைது செய்யப்படத்தான் வேண்டும், என்றார்.
கோயில்களில் ரூ.6 லட்சம் கோடி கொள்ளை : ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: தமிழ் என்ற பெயரே இருக்கக்கூடாது, என்பதற்காக தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம். இதனை மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு மட்டும் ஏன் பேசுகிறார்கள். 'தமிழ் என்ற சனியனே இருக்கக் கூடாது,' என ஈ.வெ.ரா., பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன.தமிழக அரசு, கோயில்களுக்கு கும்பாபிேஷகம் செய்வதில்லை. ஐம்பது ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் விவசாயிகளின் காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. ஒட்டன்சத்திரத்தில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhar G S - Chennai,இந்தியா
19-மார்-201812:15:27 IST Report Abuse
Dhar G S மாநில அரசியலில் ஊழல் நடந்து கொண்டுதான் உள்ளது. அது உள்ளங்கனி நெல்லிக்கனி போல் எல்லோருக்கும் தெரியும். மத்திய அரசு பொறுப்பில்தான் சி பி ஐ, என்போர்ஸ்மென்ட் directorate உள்ளது. மத்திய அரசு ஊழலை கட்டுப்படுத்தவேண்டும். மத்திய அமைச்சர்களே கொள்ளை அடித்தால் வேலியே பயிரை மேய்கிறதாகிறது.
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
09-மார்-201811:18:59 IST Report Abuse
Devanatha Jagannathan உண்மை செய்திகளை முந்தி தருவதில் இவர் ராஜா தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை