டோல்கேட் கட்டணம் எதிராக வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டோல்கேட் கட்டணம் எதிராக வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மேலுார், காரைக்குடி வாகனங்களுக்கு சிட்டம்பட்டி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க தடை கோரியதில் என்.எச்.ஏ.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.காரைக்குடி வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு:மதுரை சிட்டம்பட்டி நான்குவழிச்சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கிருந்து புதுக்கோட்டை பூதகுடி டோல்கேட்வரை 94 கி.மீ.,செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அறிவித்தது.மதுரையிலிருந்து மேலுார், திருப்புத்துார், காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள், சிட்டம்பட்டி டோல்கேட்டிற்கு உட்பட்ட நான்குவழிச்சாலையில் 9 கி.மீ.,துாரம் பயணித்து பின், மாநில நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.நான்குவழிச்சாலையில் மிகக்குறைந்த துாரம் பயணிக்கும் மேலுார், திருப்புத்துார், காரைக்குடி, புதுக்கோட்டை செல்லும் வாகனங்களிடம் டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வுஎன்.எச்.ஏ.ஐ.,தலைவர், திட்ட இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 16 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X