காவு வாங்கும் காவல்துறை மாற வேண்டும்: விஜயகாந்த்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவு வாங்கும் காவல்துறை மாற வேண்டும்: விஜயகாந்த்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காவு வாங்கும் காவல்துறை மாற வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: 'மக்களை காக்கும் காவல்துறை, காவு வாங்கும் துறையாக இல்லாமல், சேவை துறையாக மாறவேண்டும்' என தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண், போலீஸ் இன்ஸ்பெக்டரால் எட்டி உதைக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி மற்றும் வேதனை அளிக்கிறது. மக்களை காக்க வேண்டிய காவல்துறை, அரசின் ஏவல் துறையாக செயல்படுவது வேதனை தருகிறது.ஒருபுறம் மன உளைச்சலால், போலீசார் தங்களை தாங்களே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொள்ளும் நிலை, தமிழகத்தில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் சரியில்லாததால், அராஜகத்தில் ஈடுபடும் போலீசாரையும் பார்க்க முடிகிறது. போலீசார் வசூல் செய்வதையும், ஊழல் செய்வதையும் குறிக்கோளாக வைக்காமல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, நிதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவம், நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை.மக்களை காக்கும் காவல்துறை, காவு வாங்கும் துறையாக இல்லாமல், சேவை துறையாக மாற வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-201810:23:44 IST Report Abuse
Malimar Nagore காவல் துறை என்று பேர்வைக்காமல் லஞ்ச துறை என்று பேர் வைத்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
10-மார்-201800:38:24 IST Report Abuse
ramasamy naicken முதல்வர் ஆக வேண்டும் என்று சரத் குமார் பகலிலும் கனவில் மிதக்கின்றார். ஆனால் ராஜா ஹரிஹர ஷர்மாவை கூட கண்டிக்க துப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:58:46 IST Report Abuse
Srinivasan Kannaiya திராவிடர்கள் எப்பொழுது ஆட்சிக்கு வந்தார்களோ அன்றே காவல்த்துறை ஏவல் துறையாகி விட்டது... மனாதாபிமானததை சுட்டு சாப்பிட்டுவிட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை