பைக்கை உதைத்ததில் கர்ப்பிணி சாவு : துரத்திய இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கை உதைத்ததில் கர்ப்பிணி சாவு : துரத்திய இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருச்சி: திருச்சி அருகே பைக்கை துரத்திச் சென்று உதைத்து, கர்ப்பிணி பெண் சாவுக்கு காரணமான போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி, துவாக்குடி அருகே, நேற்று முன் தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர், காமராஜ், நிறுத்தாமல் சென்ற பைக்கை விரட்டிச் சென்று எட்டி உதைத்தார். இதில், பைக்கில் சென்ற ராஜா என்பவர், படுகாயம் அடைந்தார். அவரது, மூன்று மாத கர்ப்பிணி மனைவி உஷா, 36, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இன்ஸ்பெக்டரின் செயலைக் கண்டித்து, பெல் ரவுண்டானா பகுதியில், பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதில், பலர் காயமடைந்தனர்; 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், ஐவர் விடுவிக்கப்பட்டனர்; 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பிரச்னைக்கு காரணமான இன்ஸ்பெக்டர், காமராஜை, துவாக்குடி போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குற்றம் மற்றும் விபத்து மூலம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தல் ஆகிய இரு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்தனர்.நேற்று காலை, நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி, இன்ஸ்பெக்டர் காமராஜை, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். காமராஜை, பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜூலு நேற்று உத்தரவிட்டார்.இறந்த பெண் உஷாவின் கணவர் தர்மராஜை, மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள ஜே.எம்., 6 மாஜிஸ்திரேட் ஷகிலா முன், நேற்று காலை போலீசார் ஆஜர்படுத்தினர். தன்னை போலீசார் கடத்த முயன்றதாக, மாஜிஸ்திரேட்டிடம் அவர் புகார் மனு அளித்தார்.உஷாவின் உடல், நேற்று, திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், 'இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது, கொலை வழக்கு பதிவு செய்யாமல் உடலை பெற மாட்டோம்' என, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும், அரசு அதிகாரிகளும் அவர்களிடம் சமாதானம் பேசினர். இதையடுத்து மாலை, 5.30 மணிக்கு, உஷா உடலை, அவரது குடும்பத்தார் பெற்று சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
09-மார்-201811:09:40 IST Report Abuse
Meenu எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவரை காப்பாற்ற. பிரிவு 336 - மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறது என்ன சொல்கிறது என்றால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதம் சிறை தண்டனையோ அல்லது 250 ரூபாய் அபாரதமோ அல்லது இரண்டும் என்பது தான் தண்டனை. இரண்டாவது பிரிவு 279 - பொது பாதையில் முரட்டுத்தனமாக வாகனத்தை ஓட்டுதல் என்ன சொல்கிறது என்றால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது 1000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் என்பது தான் தண்டனை. அதுவும் அப்பீல் செய்தால் விடுதலை ஆகிவிடுவார். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம், பிறகு வேலையில் சேர்ந்து விடுவார். இது தான் நடக்கும். ஆனால் மனைவியையும், சிசுவையும் இழந்தவர் தான் பாவம், அவர் ஒரு நல்ல வழக்கறிஞரை ஆலோசிப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை