திருச்சியில் பலியான பெண் குடும்பத்திற்கு நிதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் பலியான பெண் குடும்பத்திற்கு நிதி

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: திருச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான, உஷாவின் குடும்பத்துக்கு, ஏழு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த ராஜா, தன் மனைவி உஷாவுடன், திருச்சியில் உள்ள நண்பரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, டூ வீலரில் சென்றார். திருச்சி துவாக்குடி அருகேயுள்ள சோதனை சாவடியில், திடீரென போலீசார் வழிமறித்தனர். உடனடியாக வாகனத்தை நிறுத்த முடியாத ராஜா, சிறிது துாரம் சென்று, வாகனத்தை நிறுத்த முயன்றார்.அதற்குள், போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், மற்றொரு டூ வீலரில், அதிவேகமாக விரட்டி சென்றார். ராஜாவின் வாகனம் அருகே சென்ற அவர், ராஜாவின் மனைவி உட்கார்ந்திருந்த பகுதியில், எட்டி உதைத்தார். இதில், கீழே விழுந்த, மூன்று மாத கர்ப்பிணியான உஷா, சம்பவ இடத்திலேயே ரத்தப்பெருக்கு ஏற்பட்டு பலியானார். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும், பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.இந்நிலையில், உயிரிழந்த உஷாவின் குடும்பத்துக்கு, ஏழு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருச்சி சம்பவம் குறித்து, திருவெறும்பூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். துறை ரீதியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் விசாரணை துவங்கியுள்ளது. விசாரணை முடிவில், தக்க நடவடிக்கைஎடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
09-மார்-201819:57:37 IST Report Abuse
Nalanvirumbi பணியில் உள்ள போலீஸ்காரன் செத்தால் 1 கோடி நிதி. பணியில் உள்ள போலீஸ்காரன் சாகடித்தால் 7 லட்சம் கணக்கு சரியாய் வரலையே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை