வைகோ மீது போலீசில் புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைகோ மீது போலீசில் புகார்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'ஈ.வெ.ராமசாமியின் சிலையை அகற்ற நினைப்பவர்களின் கையை வெட்டுவேன்' எனக்கூறிய, வைகோ மீது,போலீசில் புகார் தரப்பட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்தவர், சீனிவாசன். இந்து மக்கள் கட்சி நிர்வாகியான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:ஈ.வெ.ராமசாமி வாழ்ந்த காலத்தில், ஹிந்து மதத்தை கடுமையாக சாடினார். ஹிந்து கடவுள்களின் சிலைகளைஉடைத்தார். இதனால், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா, தமிழகத்தில் இருந்து, ஈ.வெ.ராமசாமியின் சிலைகளை அகற்ற வேண்டும் என, சமூகவலைதளமான, 'பேஸ்புக்' கில் கருத்து பதிவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, 'ஈ.வெ.ராமசாமியின் சிலைகளை அகற்ற நினைப்பவர்களின் கையை வெட்டுவேன்' என, பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X