எச்.ராஜா விளக்கத்தை கட்சி ஏற்றது: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா விளக்கத்தை கட்சி ஏற்றது: தமிழிசை

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''எச்.ராஜாவின் விளக்கத்தை, கட்சி மேலிடம் ஏற்றுள்ளது; எனவே, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.அவரது பேட்டி:ஈ.வெ.ராமசாமி சிலையை உடைத்தவர்களை, கட்சியை விட்டு நீக்கி விட்டோம்.'சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து, தன்னுடையதல்ல' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா சொல்லி விட்டார். அந்த விளக்கத்தை, கட்சி ஏற்றுள்ளது. அதனால் தான், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நாங்கள் நாகரிகமாக, கட்சி விரோத நடவடிக்கை என சொல்லி, ராமசாமி சிலையை சேதப்படுத்தியவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம்.சென்னை, திருவல்லிக்கேணியில், பூணுால் அறுக்கின்றனர். எங்கள் கட்சி அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசுகின்றனர்.நான் நடவடிக்கை எடுத்தது போல, வன்முறையில் ஈடுபடுவோர் மீது, அவர்களின் கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மறையான அரசியலை எடுத்துச் செல்வோம்; எதிர்மறையான அரசியல் தேவையில்லை.வளர்ச்சியான அரசியல் இருக்கட்டும்; கிளர்ச்சியான அரசியல் தேவையில்லை.கருத்துக்கு கருத்து மோதல் இருக்கலாம். ஆனால், அது,வன்முறையாக மாறக்கூடாது. எந்த சிலையையும் சேதப்படுத்துவது என்பது, பா.ஜ., கொள்கை இல்லை.இவ்வாறு தமிழிசை கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
09-மார்-201816:38:10 IST Report Abuse
Baskar ராஜா விளக்கத்தை கட்சி ஏற்று கொண்டது. ஆனால் தமிழக மக்கள் ஏற்கவில்லை. எனவே உங்கள் கட்சியை சேர்ந்த ராஜா நீங்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோர் பெரியார் சிலை முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை