'தமிழகத்தில் வெற்றிடம் இல்லை'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தில் வெற்றிடம் இல்லை'

Added : மார் 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: ''தமிழகத்தில், தலைவர்களுக்கான வெற்றிடம் என்பதற்கு இடமில்லை,'' என, முதல்வர் பழனிசாமியும், ''எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வமும் கூறினர்.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பின், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி: திருச்சியில், கர்ப்பிணி பெண், உஷா இறந்த சம்பவம், மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில், அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.ஈ.வெ.ராமசாமி குறித்த கருத்தை, தனக்கு தெரியாமல், உதவியாளர் பதிவு செய்து விட்டதாக, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அவருக்கு, தெரியாமல் நடந்திருந்தாலும், அது கண்டனத்துக்குரியது தான். அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிலைகளை சேதப்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைப்போம்' என, ரஜினி கூறியது, அவரது கருத்து. இப்போது நடக்கும் ஆட்சியும், எம்.ஜி.ஆர்., ஆட்சி தான். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதா, தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பாடுபட்டார்.மறைந்த இரு தலைவர்களும், இறுதி வரை, மக்களுக்காக பாடுபட்டனர். எனவே, தமிழகத்தில், வெற்றிடம் என்பதற்கு இடமில்லை.ஜெயலலிதா, எப்படி ஆட்சி செய்தாரோ, அதேபோன்ற ஆட்சியை, அவரது மறைவுக்கு பின் வழங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, தமிழகத்தில் வெற்றிடத்திற்கு இடமில்லை. பன்னீர்செல்வத்துடன் கலந்து பேசி, விரைவில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு முதல்வர் கூறினார்.துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறுகையில், ''ஈ.வெ.ராமசாமிக்கு எதிராக, எச்.ராஜா பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது. 'டுவிட்டரில்' தன் உதவியாளர் பதிவு செய்து விட்டதாக கூறுவதை, ஏற்க முடியாது. அனைவரின் மனமும் புண்பட்டுள்ளது. எனவே, எச்.ராஜா, பொது மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
09-மார்-201817:34:03 IST Report Abuse
ram தமிழகத்தில், தலைவர்களுக்கான வெற்றிடம் என்பதற்கு இடமில்லை. இப்போது உள்ள ஆட்சி நல்லா தான் போயிட்டு இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை