புகையிலை விற்றால் 3 ஆண்டு சிறை| Dinamalar

புகையிலை விற்றால் 3 ஆண்டு சிறை

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: மஹாராஷ்டிராவில், சட்ட விரோதமாக, புகையிலை பொருட்களை விற்பனை செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனாகூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், சட்டசபையில் நேற்று, மாநில உணவு மற்றும் கலால் துறை இணை அமைச்சர், மதன் எராவர் கூறியதாவது: புகையிலை பொருட்களை, வேறு மாநிலங்களில் இருந்து எடுத்து வந்து, திருட்டுத்தனமாக இங்கு விற்கின்றனர்.தடையை மீறி, புகையிலை பொருட்கள் விற்பவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு, ஜாமினில் வெளி வர முடியாத வகையில், சிறை தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை