எச்.ராஜா ஜெயிலுக்கு போவது நிச்சயம்: அமைச்சர் ஜெயகுமார் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா ஜெயிலுக்கு போவது நிச்சயம்: அமைச்சர் ஜெயகுமார்

Added : மார் 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''எச்.ராஜாவை கைது செய்வோம்,'' என, அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.அவரது பேட்டி: 'தமிழ் மொழியை அழிப்பதற்காகவே, திராவிடம் என்ற சொல்லை, ஈ.வெ.ராமசாமி கொண்டு வந்தார்' என்றும், 'தமிழ் என்ற சனியனே இருக்க கூடாது என, அவர் பேசினார்' என்றும், பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறியுள்ளார். மலிவான விளம்பரத்துக்காக, இந்த மாதிரி கூற்றுகளை சொல்லக் கூடாது. இதை, தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற, எந்த செயலையும், எந்த நிலையிலும், அரசு ஏற்றுக் கொள்ளாது. அது, யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி, கைது செய்ய வேண்டிய நபர் தான்.இந்த மாதிரி தவறான தகவல் கொடுத்து, மக்களை திசை மாற்றி, வன்முறை கலாசாரத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு,சொல்லிக் கொள்கிறேன். அவர் ஜெயிலுக்கு போவது நிச்சயம். கண்டிப்பாக, அவரை கைது செய்வோம்.ஏற்கனவே, எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். இப்போது, மீண்டும் தேவையில்லாமல் பேசுகிறார். எனவே, அவர் யாராக இருந்தாலும் சரி. சட்டம் தன் கடமையை செய்யும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
09-மார்-201817:47:06 IST Report Abuse
ram எச்.ராஜாவை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
09-மார்-201805:43:44 IST Report Abuse
SureshShanmugam Muttal Jayakumar, tamilan kaatumirandi ..book peru tamilum tamilanum maarra pattathu theriyaatha. mothala periyara paththi patting Mr Minister SIR.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை