கைதான கணபதிக்கு ஜாமின்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கைதான கணபதிக்கு ஜாமின்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: லஞ்ச வழக்கில் கைதானதால், 'சஸ்பெண்ட்' ஆன, பாரதியார் பல்கலை துணை வேந்தர், கணபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.கோவை, பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணி நியமனத்துக்கு, ௩௦ லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, துணை வேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பிப்., ௩ல், இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பணியிலிருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணபதி, ஜாமின் கோரி, கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில், இரண்டு முறை மனு தாக்கல் செய்தார்; அது, தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், கணபதி மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி, ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கணபதிக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். 'கோவையை விட்டு வெளியே செல்லக் கூடாது; விசாரணை நீதிமன்றத்தில், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; மறுஉத்தரவு வரும் வரை, தினசரி காலை, மாலையில், லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராக வேண்டும்' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை