கருணை இல்லங்களில் இறந்தோர் விபரம் சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணை இல்லங்களில் இறந்தோர் விபரம் சேகரிப்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலுார்: வேலுார் மாவட்டத்தில், கருணை இல்லங்களில் இறந்தோர் குறித்த விபரங்களை சேகரிக்க, கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். வேலுார் மாவட்டம், திருவலத்தில், அனுமதியின்றி இயங்கி வந்த, பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர், சரியாக பராமரிக்கப்படாமல் கொடுமைபடுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கருணை இல்லத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அங்கிருந்த, 16 முதியோர் மீட்கப்பட்டு, வேலுார், அரியூரில் இயங்கி வந்த, அரசு முதியோர் இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.இவர்களில் உடல் நலம் குன்றியிருந்த நான்கு பேர், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து, வேலுார் கலெக்டர், ராமன் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில், அனுமதியின்றி முதியோர் இல்லம், கருணை இல்லங்கள் இயங்கி வருகின்றனவா என்றும், அவற்றில் இறந்தோர் யார், எப்போது இறந்தனர் என்ற விபரங்களை சேகரிக்கும்படியும், அனைத்து தாசில்தார்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.அனுமதியின்றி இயங்கி வருவது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X