தி.மு.க., கலந்துரையாடல் கூட்டம் ஒத்திவைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கலந்துரையாடல் கூட்டம் ஒத்திவைப்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'வரும், 15ம் தேதி, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கஉள்ளதால், மாவட்ட வாரியான, கலந்துரையாடல் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது' என, தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கட்சிப் பணிகளை செம்மைப்படுத்த, செயல் தலைவர், ஸ்டாலின், சென்னை, அறிவாலயத்தில், பிப்., 1 முதல், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். வரும், 15ம் தேதி, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், அன்று முதல் நடக்கவுள்ள கடலுார் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, திருவள்ளூர் வடக்கு, தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு, சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டத்துக்கான தேதிகள், பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை