மின் வாரிய பொறியாளர் பணி 87 ஆயிரம் பேர் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய பொறியாளர் பணி 87 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மின் வாரியத்தில், எழுத்து தேர்வு வாயிலாக, உதவி பொறியாளர்களை தேர்வு செய்யும்முடிவிற்கு, வரவேற்பு கிடைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 'எலக்ட்ரிக்கல்' பிரிவில், 300; 'சிவில்' பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் காலிபணியிடங்களை, எழுத்து தேர்வு வாயிலாக நிரப்ப உள்ளது.இதற்காக, வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, பிப்., 14ல் துவங்கியது. விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம், இம்மாதம், 6ல் முடிவடைந்தது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தேர்வுக்கு 87 ஆயிரத்து, 378 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் முறையாக, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக, சமீபத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.நேர்முக தேர்வு மதிப்பெண் விபரங்கள், நேர்காணல் முடிந்த தினமே, மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, ஊழியர்கள் தேர்வு, வெளிப்படையாக நடந்தது.இருப்பினும், சில அரசியல் கட்சிகள், நேர்காணல் தொடர்பாக, புகார் எழுப்பின.இதையடுத்து, எழுத்து தேர்வு வாயிலாக மட்டுமே, ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கு, பல தரப்பிலும், குறிப்பாக இளைஞர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் தான், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.இவ்வாறு அவர்கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X