நாகாலாந்து முதல்வராக நெய்பியு பதவியேற்பு| Dinamalar

நாகாலாந்து முதல்வராக நெய்பியு பதவியேற்பு

Added : மார் 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நாகாலாந்து முதல்வராக நெய்பியு பதவியேற்பு

கோஹிமா: நாகாலாந்து முதல்வராக என்.டி.பி.பி., தலைவர் நெய்பியு ரியோ ௬௭, நேற்று பதவியேற்றார்.நாகாலாந்தில் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.டி.பி.பி., எனப்படும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பா.ஜ., கூட்டணிக்கு ௨௯ இடங்கள் கிடைத்தன.நாகாலாந்தில் ஆட்சி செய்த என்.பி.எப்., எனப்படும் நாகா மக்கள் முன்னணிக்கு ௨௯ இடங்கள் கிடைத்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் என்.டி.பி.பி., - என்.பி.எப்., ஆகியவை ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,வும், சுயேச்சை, எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., - என்.டி.பி.பி., கூட்டணிக்கு ஆதரவளிக்க சம்மதித்தனர்.இதையடுத்து ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்துடன் கவர்னர் ஆச்சார்யாவை, என்.டி.பி.பி., தலைவர் நெய்பியு ரியோ சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ரியோவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.இதைத் தொடர்ந்து, தலைநகர் கோஹிமாவில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் நாகாலாந்து முதல்வராக, ரியோ பதவியேற்றார். துணை முதல்வராக நாகாலாந்து பா.ஜ., தலைவர் யன்துங்கோ பட்டான் பதவியேற்றார். அமைச்சர்களாக ௧௦ பேர் பதவியேற்றனர்.பதவியேற்பு விழாவில் ராணுவ அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நாகாலாந்து முன்னாள் முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் உட்பட பலர் பங்கேற்றனர்.இதன் மூலம்மொத்தமுள்ள ஏழு வட கிழக்கு மாநிலங்களில் ஆறு மாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X